Skip to main content

Posts

Showing posts from 2009

இலங்கைப் பதிவர் சந்திப்பு - 2009

கடந்த ஞாயிற்றுக்கிழமை - 23.08.2009 முதல் ((என்று சொல்லப்படுகிறது)) இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தேன். நிகழ்வு இனிதே நிகழ்ந்தது... சிறப்பாக எழுதக்கூடியவர்கள், சிறந்த பேச்சாளர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது உண்மைதானோ? அதனால் எக்குறையுமில்லை, கலந்துரையாடல் இன்னும்கொஞ்சம் உத்தியோகபூர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தனைபேர் கலந்துகொள்வர் என அக்கூட்டத்திற்கு வந்த பலரைப்போல நானும் எதிர்பார்க்கவில்லை. பலர் பலவற்றைப் பேசினர், நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைச்சொல்லி விவாதத்தைத் தூண்டிவிட்டேன். அந்த விவாதம் சற்றுச் சூடுபிடித்துவிட்டது, அதனை இன்னும் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அந்நிகழ்வின் நோக்கம் அதில்லையென்பதால் பேசாமல் அமர்ந்துவிட்டேன். இது முதலாவது முயற்சி என்ற ரீதியில் பார்க்குமிடத்து நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சிலரைப் பற்றி மிகவும் பம்பல் அடிக்கப்பட்டிருந்தது, அதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். நபர்களை அறிமுகஞ்செய்யும் விதத்திலும் சில இடங்களில் சற்று அதிகமாகப் போய்விட்டது என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒழுங்கமைப்பாளா்கள் பணச்சுமையைச் சுமக்கக்கூடாது, ஆனால் அத...

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்... ம்.. இன்று எல்லோரும் முணுமுணுக்கும் பெயர். ரஹ்மானின் இரசிகன் நான்... றோஜாவிலிருந்தே இரசிகன்... ஒஸ்கார் கிடைத்தது பெரிய விசயம்தான்... ஆனால், ஒஸ்காரால் அவருக்குப் பெருமையல்ல... ரஹ்மானிடம் எனக்குப் பிடித்தது... இசையைத் தவிர... அவரது பணிவு... பெருந்தன்மை... மனிதாபிமானம்.. சுனாமி அடித்தபோது... தமிழகத்தின் ஒரு கிராமத்தின் கடற்கரையில் ரஹ்மான், சிவமணி, ஹரிகரன் எனத் தன் குழுவினருடன் போய் ஒரு இசைக் கச்சேரி செய்தாராம்... சுமார் இரண்டரை மணிநேரம் செய்தாராம்... இதைவிட மனிதாபிமானத்திற்கு அத்தாட்சி என்ன வேண்டும்... அவர் நடத்திய கச்சேரிகளை விரல்விட்டு எண்ணலாம்... சென்னையில் ஒரேயொரு முறைதான் நடத்தியிருக்கிறார்... வாழ்க ரஹ்மான்...

மீண்டும்

எனக்கும் நிறைய எழுதவேண்டும் என்று ஆசைதான்... காலம் கைகொடுக்கவில்லை என்பதைவிட நான் காலத்திற்குக் கைகொடுக்கவில்லை என்பதே சரி. காலத்திற்கு கைகொடுத்து அதனை அனுசரிக்கவில்லை... சரி போகட்டும்... இனி.. இன்றிலிருந்து ஏதாவது ஏழுதவேண்டும்.. மீண்டும் ஒரு மூர்க்கத்தனமான முடிவு. பார்ப்போம்..