Skip to main content

Posts

Showing posts from 2008

கன காலத்துக்குப் பிறகு...

கனகாலத்துக்குப் பிறகு இண்டைக்கு இதைத் திரும்ப எழுதத்தொடங்கவேண்டும் எண்டு நினைச்சன். இத மாதிரி எத்தனையோ வேலைகளைச் செய்யத்தொடங்கி அமையெல்லாம் அப்படி அப்படியே கிடக்கு. என்ன செய்யயிறனெண்டு தெரிமாகக் கிடக்கு. சில நேரம், இதெல்லாம் செய்து என்ன நடக்கப்போகிது எண்டு நினைப்பன். சிலவேளை ஐயோ செய்யவேண்டும் என்று நினைத்து இப்படி ஒரு போஸ்டைப் போடுவன். பாப்பம் இனி என்ன நடக்கப்போகுதெண்டு...

தசாவதாரம் - ஒரு வித்தியாசமான பார்வை

தசாவதாரம் பற்றி நானும் எழுத முனைந்தேன்...அதனை முழுமையாக, முக்கியமாக விஞ்ஞானநோக்கில் பார்க்கமுனைந்துள்ளேன். அது இம்மாத ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. http://docs.google.com/View?docid=dpxnhgb_1g8v9qz73

விவாகரத்துக் கலாசாரம்

சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன. நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை. நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த ...

வானொலித் தகவல் - 2008.07.04

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Firefox 3.0 இன்று பார்த்தோமானால் பயர்பொக்ஸ் 3 சம்பந்தமாக பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், பயர்பொக்ஸ் 3 என்பது Mozilla அறக்கட்டளையால் வெளியிடப்படும் ஒரு இலவச திறந்த மூல இணைய உலாவியாகும். இந்த பயர்பொக்ஸ் 3.0 இன் இறுதிப் பதிப்பு கடந்த 17ம் திகதி 46 மொழிகளில் வெளியிடப்பட்டது. அது வெளியிடப்பட்டு 24ம் மணித்தியாலங்களுக்குள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் அதனைப் பதிவிறக்கியுள்ளார்கள். இந்த எண்ணிக்கையே இதுவரை வெளிவந்த மென்பொருள்களில் ஒருநாளில் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கப்பட்ட மென்பொருளாகும். இது திறந்த மூல மென்பொருள் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளதுடன், பெரும் வெற்றியாகவும் கருதப்படுகிறது. இனி பயர்பொக்ஸ் 3 இல் உள்ள சிறப்பம்சங்கள் எவையெனப் பார்ப்போம். உங்களில் பலர் பயர்பொக்ஸ் 2ம் பதிப்பைப் பயன்படுத்திவரலாம், அதன் மூலம் சிலவேளை விரக்தியடைந்தும் இருக்கலாம். ...

வானொலித் தகவல் - 2008.06.27

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினியின் திறனை அதிகரித்தல். நிச்சயமாக உங்களுக்குத்தெரியும், வன்பொருள்களின் அளவை அவற்றின் கொள்ளவுகளை அதிகரிப்பதன் மூலம் கணினியின் திறனை அதிகரிக்கலாம் என்பது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போன்ற விடயம் என்னவெனில், எப்படி அவ்வாறு புதிய வன்பொருள்ளோ அல்லது பணச்செலவோ இல்லாது, ஒரு கணினியின் திறனை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கலாம் என்று. கணினியின் திறனை எடுத்துக்கொண்டால், அது கணினியின் 1. தற்காலிக நினைவகமான RAM 2. CPU 3. Harddisk இல் உள்ள வெற்றிடம் மற்றும் அதில் உள்ள கோப்புகளின் ஒழுங்கமைப்பு. 1. முதலாவதாக வன்தட்டின் திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்ப்போம். சிறிதுகாலம் செல்ல வன்தட்டிலுள்ள கோப்புகள் / தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்காணப்படலாம். எனவே அவை அவசியப்படும் நேரத்தில் அவை சிதறிக்கிடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று அவற்றை வாசிக்கவேண்டிய தேவை கணினிக்கு இருக்கிறது. இது குறித்த கணினியின் திறனை குறைக்க...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலி - 2008.06.14

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். உபுன்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் உபுன்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் பற்றி நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். சுருக்கமாக உபுண்டு ஒரு இலவச திறந்த முல மென்பொருள் அத்தோடு விண்டோஸ் ஆனது புரொப்பிறைறி மென்பொருளாகும். அதற்குப் பணங்கொடுத்துப் பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தோடு ஒருமுறை பணங்கொடுத்துப் பெற்றுக்கொண்டாலும் அதன் பின் வரும் எந்தவொரு புதிய பதிப்புகளும் இலவசமாக்க் கிடைக்காது. முன்னர் உபுண்டு போன்ற லினக்ஸ் குடும்பம் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பெரிய குற்றச்சாட்டு, அவை User friendliness குறைந்தவை, சாரதாரண கணினிப் பணியாளர்களால் பயன்படுத்த முடியாது என்பதே. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நாம் விண்டோஸில் எப்படி இலகுவாக செயற்பாடுகளைச் செய்தோமோ, அதேபோன்று இன்று உபுண்டு உட்பட பல லினக்ஸ்சார் இயங்குதளங்களிலும் இலகுவாகப் பணியாற்றக்கூடியதாக இருக்கிறது. மேலும் முன்னரைப்போலன்றி இன்று இந்த உபுண்டு பத...

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.05.10

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். இலவச மென்பொருள் – திறந்தமூல மென்பொருள் இலவச மென்பொருள் மற்றும் திறந்த மென்பொருள்.... இரண்டும் ஒன்றல்ல. திறந்த மூல மென்பொருள் எனும்போது, அது உரிமத்தோடு சம்பந்தப்பட்டதொன்றல்ல. இதன் அர்த்தம் என்னவெனில், குறித்த மென்பொருளின் மூலம் எமக்குக் கிடைக்கும். நாம் அதனைப் பயன்படுத்தலாம். நாம் மைக்குரோசொப்ட் நிறுவனத்தை எடுத்துக்கொண்மோமெனின், அதனுடைய மூலத்தை எம்மால் பார்க்கவோ பயன்படுத்தவோ முடியாது. ஆனால் அப்பாச்சி நிறுவனத்தின் மென்பொருள்களின் மூலங்களை நாம் பார்வையிடலாம். இலவச மென்பொருள் எனும்போது, நாம் நினைக்கலாம்.... இது இலவசமாக்க் கிடைக்கும் மென்பொருள் என்று. ஆனால் உண்மையில் இலவசம் என்பது அல்ல இங்கே பொருள். இது ஒரு உரிமம் சம்பந்தப்பட்ட ஒரு வார்த்தை. அதாவது, 1. குறித்த மென்பொருளை பயனாளர்கள் எந்த்த் தேவைக்கும் பயன்படுத்தலாம் 2. குறித்த மூலத்தினை ஆராய்ந்து அது எவ்வாறு செயற்படுகிறது என்பதனைப் பார்க்கலாம் 3. அந்த மென்பொருளை ஏனை...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : PDA PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் தட்டச்சுச் செய்யலாம். அத்தோடு பெரும்பாலான இந்த கையட...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...

வானொலித் தகவல் - 2008.03.25

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : கணினி விளையாட்டுக்கள் கணினி விளையாட்டுகள் பெரும்பாலும் ஒரு தீங்கான விடயமாகவே கருதப்பட்டுவருகிறது. பொதுவாகப் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கணினி விளையாட்டுக்களுக்கு அடிமையாவதைப் பற்றிக் கவலைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால் கணினி விளையாட்டுகள் முற்றுமுழுதாகத் தீங்கானவை அல்ல! இப்பொழுதுபோக்கம்சத்தின் மூலம் நாம் நிறையக் கற்றுக்கொள்ளமுடியும். நிறைய வகையான விளையாட்டுகள் இருக்கின்றன. உதாரணமாக strategic Games நாம் எப்படி ஒரு விடயத்தை யோசிக்கவேண்டும், இப்படி அதற்காக ஆயத்தம்செய்யவேண்டும் போன்றவற்றை எல்லாம் பழகிக்கொள்ளமுடியும். உதாரணமாக ஒரு விளையாட்டிருக்கிறது அதில் நாம் வேலைசெய்யவேண்டும், அதன் மூலம் பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு வீடுவாங்கலாம், சேமிக்கலாம், வியாபாரம் செய்யலாம்... எனவே இவை சம்பந்தமான எமது அறிவை தீட்டிக்கொள்ளலாம் அதாவது எவ்வாறு வளத்தை சேர்ப்பது, பயன்படுத்துவது எதிர்காலத்தைக் க...

வானொலித் தகவல் - 2008.03.22

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் எமது நாட்டில் மிக அண்மைக்காலம் வரை நாம பயன்படுத்தி வந்த கைத்தொலைபேசி தொழில்நுட்பமானது யி.எஸ்.எம். என அழைக்கப்படுகிறது. அதாவது குளோபல் சிஸ்டம் 4 மொபைல் கொம்மினிகேசன். இவை கம்பியில்லாதொடர்புத் தொழில்நுட்பத்தின் அதாவது வயர்லெஸ் தொழில்நும்பத்தின் 2வது பரப்பரையைச் சேர்ந்தவை. நாம் இதை 2யி தொழில்நுட்பம் என்போம். அத்தோடு எம்மில் பலர் இன்றும் பயன்படுத்திவருகின்ற, யி.பி.ஆர்எஸ் (General Packet Radio Service) ஆனது 2.5ம் பரம்பரை கம்பியில்லாத் தொழில்நுட்பமகும். அதன் உதவியுடன் நாம் கைத்தொலைபேசிகளூடு இணையத்தில் உலா வரக்கூடியதாக இருந்தது. இவை 56 முதல் 114 கிலோ பிட்ஸ் வேகத்தினைக் கொண்டிக்கின்றன. ஆரம்பத்தில் ஒலியை மட்டுமே பரிமாற்ற உதவிய தொழில்நுட்டபம் 2ம் பரம்பரை அல்லது 2யி உடன் சுருக்க தகவல் சேவையையும் வழங்கியது. பின் வந்த 2.5 யி ல் இணைய அணுகல் சேர்க்க...

தசாவதாரம்- நானும் ஒரு விமர்சனம் எழுதினேன்

தசாவதாரம்... இண்டைக்குத் தேதிக்கு அதிகம் விமர்சிக்கப்படும் படம்... கமலின் அரசியலூடாகப் பலர் பார்க்கிறார்கள், பலர் அதை விஞ்ஞானமாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு மசாலா தமிழ்த் திரைப்படமாகவும் பார்க்கலாம். நான் ஒரு 4 பக்க விமர்சனம் எழுதினேன். அதில் முடிந்தளவு இந்த எல்லாக்கோணங்களிலும் பார்க்க முனைந்தாலும், விஞ்ஞானவே முன்னுக்கு வந்து விழுந்திருக்கிறது. அது இலங்கைளில் வெளிவரும் 'ஞானம்' சஞ்சிகையில் இம்முறை வரவிருக்கிறது. அதன் பின் நான் அதனை இங்கே தருகிறேன்.

புத்தகங்கள் படிக்க மட்டுமல்ல

நீங்கள் படிக்காத, ஏன் திறக்காத புத்தகங்கள் எப்போதாவது உங்களுக்கு அறிவைத் தந்திருக்கின்றனவா? அல்லது அவ்வாறு அவை தரமுடியுமா? ஆம் என்கிறேன், நான்! எனக்கு நான் திறக்காத புத்தகங்களும் அறிவைத் தந்திருக்கின்றன. கீழேயுள்ள புத்தக மேசையைப் பார்த்தால் உங்களுக்குப் புரியும், அப்புத்தகங்கள் கூட எவ்வாறு அறிவைப் பெற உதவின என்று. J    

அடிமைப்படுங்கள்

என்னத்தைச் சொன்னாலும் வாழ்க்கையில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒ்ன்றுக்கு அடிமையாகியே ஆகவேண்டும். அல்லது, வாழ்க்கையில் ஒரு சலிப்பு வந்துவிடும். ஒரு வெறுமை.... இந்த வெறுமை உணர்வை உணர்ந்துதான் பார்க்கவேண்டும், வார்த்தைகளில் வடிக்கமுடியாது... எனவே தயவுசெய்து எதற்காவது அடிமைப்படுங்கள்...

பலதும் பத்தும்

இதில் நான் நினைப்பவை, பார்ப்பவை, செய்பவை எல்லாம் அடங்கும்.... இதை எழுதலாம்... இதை இவர் எழுதியிருக்கக்கூடாது என்றெல்லாம் பார்க்காதீர்கள்... இதில் எல்லாம் இருக்கும்... நன்றிகளுடன் சர்வேஸ்