Skip to main content

Posts

அலட்டல் 1 - ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்

ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்  இவற்றுக்கென்ன சம்பந்தம்? சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும் அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும். சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே? துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர்.  பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம். எமக்க...
Recent posts

அருட்டல் 01

o இஞ்சேருங்கோ தம்பியைத் தெரிதே? o ம்.... ம்.... o என்னண்ணை என்ன மட்டுப்பிடிக்கேலாமைக் கிடக்கே? o நீர்..... o பிறக்கிறசியற்ர மோன்! o எடக்! சுதனே... o ஓம் அண்ண. o எப்ப தம்பி வந்தனீர்? அப்பா சுகமா இருக்கிறாரே? அம்மா எப்பிடியிருக்கிறா? o நான் ஒருமாத லீவில வந்தனான் மணியண்ண. அவைக்கென்ன, அக்காவோட சுகமா இருக்கினம். o எண, கொஞ்சம் தண்ணி தாவன். நா வறண்டு போச்சு. தம்பி, சரியான வெய்யில் என்ன? வீட்டுக்கையும் இருக்கேலாது, வெளியிலையும் போகேலாது. இப்பவே உப்பிடியெண்டா பங்குனி பிறக்க இன்னும் கொளுத்தப்போகுது. o அதுதான் அண்ணை அக்காவோடை இப்ப கதைச்சுக்கொண்டிருந்தனான். முந்தி உங்கட வீடு சரியான குளிர்மையாவெல்லே இருக்கும். முந்தி இது நாச்சார் வீடெல்லே? இதிலை ஒரு வேம்பும் நிண்டதென்ன? o ஓந்தம்பி. நாங்கள் இடம்பெயர்ந்து பிறகு திரும்பி வரக்கே வீட்டுச் சுவர் எல்லாம் வேம்பிண்ட வேராலை பிளந்து கிடந்தது. உனக்குத் தெரியுமே, வீட்டுக்க மாமரமும் முளச்சுக் கிடந்தது. அதினாலை சாந்தன் போனவருசம் வெளிநாட்டாலை வரேக்க எல்லாத்தையும் தறிச்சுப் போட்டு வீட்டையும் வடிவா திருத்தினவன். உள் முத்தத்தையும் அடச்சுப் போட்டான். o ஓ அப்பிடியே! மு...

இனியாவது தொடர்ந்து பதிவம்....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! எழுத நிறைய விருப்பம், ஆனால் எப்போதும் ஏதாவது ஒன்றில் பழியைப்போட்டுவிட்டு எழுதாமல் விட்டுவிடுவேன்.... பின்னர் நான் எழுத நினைத்தவை மறந்துபோகும்... எங்காவது நல்ல பதிவுகளை வாசிக்குபோது மீண்டும் பொறாமை பொத்துக்கொண்டு வரும், ஏன் என்னால் எழுத முடியாது என்று..... இந்த 2012 இல் இருந்தாவது எழுதுகிறேனா என்று பார்ப்போம்....

புது வீடு...

வீடு புதுசில்லை... ஆனால் அந்த வீடு எனக்கு புதுசு.... முதன் முதலாக, இருப்பதற்கு ஒரு வீடு பார்த்துள்ளேன்! இரு அறைகள், ஒரு சிறு இருக்கையறை, சமயலறை என ஒரு சிறிய தொடர்மாடி வீடு... அந்த வீட்டில் இவை மட்டுமல்ல, ஏராளமான கனவுகளும் நிறைந்துள்ளன... முக்கியமாக சில விடயங்கள் எதிர்பராமல் அமைகின்றன... இன்று நான் வீடு சென்று பார்ப்பதற்கு முன் நாள் கோள் எதுவும் பார்க்கவில்லை. ஆனால் போன பின்தான் தெரிந்தது, இன்று 20ம் திகதி ஏகாதசி... எனக்கும் இவற்றுக்கும் வெகு தொடர்பு!

மீண்டும் வேதாளம்!

விடா முயற்சியுடன் மீண்டும் எழுதவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு தொடங்குகிறேன்... பார்ப்போம்! நிறைய எழுதவேண்டும் என்று நினைப்பேன்... மனம் அடங்குவதில்லை... மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறத் தொடங்குகிறது!

இலங்கைப் பதிவர் சந்திப்பு - 2009

கடந்த ஞாயிற்றுக்கிழமை - 23.08.2009 முதல் ((என்று சொல்லப்படுகிறது)) இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தேன். நிகழ்வு இனிதே நிகழ்ந்தது... சிறப்பாக எழுதக்கூடியவர்கள், சிறந்த பேச்சாளர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது உண்மைதானோ? அதனால் எக்குறையுமில்லை, கலந்துரையாடல் இன்னும்கொஞ்சம் உத்தியோகபூர்வமாக இருந்திருக்கலாம். ஆனால் அத்தனைபேர் கலந்துகொள்வர் என அக்கூட்டத்திற்கு வந்த பலரைப்போல நானும் எதிர்பார்க்கவில்லை. பலர் பலவற்றைப் பேசினர், நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைச்சொல்லி விவாதத்தைத் தூண்டிவிட்டேன். அந்த விவாதம் சற்றுச் சூடுபிடித்துவிட்டது, அதனை இன்னும் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அந்நிகழ்வின் நோக்கம் அதில்லையென்பதால் பேசாமல் அமர்ந்துவிட்டேன். இது முதலாவது முயற்சி என்ற ரீதியில் பார்க்குமிடத்து நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சிலரைப் பற்றி மிகவும் பம்பல் அடிக்கப்பட்டிருந்தது, அதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். நபர்களை அறிமுகஞ்செய்யும் விதத்திலும் சில இடங்களில் சற்று அதிகமாகப் போய்விட்டது என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒழுங்கமைப்பாளா்கள் பணச்சுமையைச் சுமக்கக்கூடாது, ஆனால் அத...

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்... ம்.. இன்று எல்லோரும் முணுமுணுக்கும் பெயர். ரஹ்மானின் இரசிகன் நான்... றோஜாவிலிருந்தே இரசிகன்... ஒஸ்கார் கிடைத்தது பெரிய விசயம்தான்... ஆனால், ஒஸ்காரால் அவருக்குப் பெருமையல்ல... ரஹ்மானிடம் எனக்குப் பிடித்தது... இசையைத் தவிர... அவரது பணிவு... பெருந்தன்மை... மனிதாபிமானம்.. சுனாமி அடித்தபோது... தமிழகத்தின் ஒரு கிராமத்தின் கடற்கரையில் ரஹ்மான், சிவமணி, ஹரிகரன் எனத் தன் குழுவினருடன் போய் ஒரு இசைக் கச்சேரி செய்தாராம்... சுமார் இரண்டரை மணிநேரம் செய்தாராம்... இதைவிட மனிதாபிமானத்திற்கு அத்தாட்சி என்ன வேண்டும்... அவர் நடத்திய கச்சேரிகளை விரல்விட்டு எண்ணலாம்... சென்னையில் ஒரேயொரு முறைதான் நடத்தியிருக்கிறார்... வாழ்க ரஹ்மான்...