Skip to main content

இலங்கைப் பதிவர் சந்திப்பு - 2009

கடந்த ஞாயிற்றுக்கிழமை - 23.08.2009 முதல் ((என்று சொல்லப்படுகிறது)) இலங்கை பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தேன். நிகழ்வு இனிதே நிகழ்ந்தது... சிறப்பாக எழுதக்கூடியவர்கள், சிறந்த பேச்சாளர்களாக இருக்கவேண்டியதில்லை என்பது உண்மைதானோ? அதனால் எக்குறையுமில்லை, கலந்துரையாடல் இன்னும்கொஞ்சம் உத்தியோகபூர்வமாக இருந்திருக்கலாம்.

ஆனால் அத்தனைபேர் கலந்துகொள்வர் என அக்கூட்டத்திற்கு வந்த பலரைப்போல நானும் எதிர்பார்க்கவில்லை.
பலர் பலவற்றைப் பேசினர், நானும் என்பங்கிற்கு சில கருத்துக்களைச்சொல்லி விவாதத்தைத் தூண்டிவிட்டேன். அந்த விவாதம் சற்றுச் சூடுபிடித்துவிட்டது, அதனை இன்னும் இழுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், அந்நிகழ்வின் நோக்கம் அதில்லையென்பதால் பேசாமல் அமர்ந்துவிட்டேன்.

இது முதலாவது முயற்சி என்ற ரீதியில் பார்க்குமிடத்து நிகழ்வு மிகவும் சிறப்பாக இருந்தது. சிலரைப் பற்றி மிகவும் பம்பல் அடிக்கப்பட்டிருந்தது, அதனை நிச்சயமாகத் தவிர்த்திருக்கலாம். நபர்களை அறிமுகஞ்செய்யும் விதத்திலும் சில இடங்களில் சற்று அதிகமாகப் போய்விட்டது என்றே நினைக்கிறேன். நிச்சயமாக ஒழுங்கமைப்பாளா்கள் பணச்சுமையைச் சுமக்கக்கூடாது, ஆனால் அதற்காகப் பெட்டியெல்லாம் வைத்து, அதனைப் பற்றி இறுதி நிமிடங்களில் விமர்சித்ததெல்லாம் சற்று அதிகம்தான்: அது விளையாட்டுக்காக இருந்தாலும் கூட.

நான் இங்கு சறுக்கல்களை மட்டுமே குறிப்பிடுகிறேன், அதில் நிறைய நல்ல விடயங்கள் இடம்பெற்றன. அது பற்றி ஏனையோர் விரியாகக் கூறியிருக்கின்றனர்.

நானும் தேரிழுக்க ஆயத்தம்!

மேலதிக விபரங்களைப் பார்த்துப்படிக்க : http://mauran.blogspot.com/

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...