o இஞ்சேருங்கோ தம்பியைத் தெரிதே?
o ம்.... ம்....
o என்னண்ணை என்ன மட்டுப்பிடிக்கேலாமைக் கிடக்கே?
o நீர்.....
o பிறக்கிறசியற்ர மோன்!
o எடக்! சுதனே...
o ஓம் அண்ண.
o எப்ப தம்பி வந்தனீர்? அப்பா சுகமா இருக்கிறாரே? அம்மா எப்பிடியிருக்கிறா?
o நான் ஒருமாத லீவில வந்தனான் மணியண்ண. அவைக்கென்ன, அக்காவோட சுகமா இருக்கினம்.
o எண, கொஞ்சம் தண்ணி தாவன். நா வறண்டு போச்சு. தம்பி, சரியான வெய்யில் என்ன? வீட்டுக்கையும் இருக்கேலாது, வெளியிலையும் போகேலாது. இப்பவே உப்பிடியெண்டா பங்குனி பிறக்க இன்னும் கொளுத்தப்போகுது.
o அதுதான் அண்ணை அக்காவோடை இப்ப கதைச்சுக்கொண்டிருந்தனான். முந்தி உங்கட வீடு சரியான குளிர்மையாவெல்லே இருக்கும். முந்தி இது நாச்சார் வீடெல்லே? இதிலை ஒரு வேம்பும் நிண்டதென்ன?
o ஓந்தம்பி. நாங்கள் இடம்பெயர்ந்து பிறகு திரும்பி வரக்கே வீட்டுச் சுவர் எல்லாம் வேம்பிண்ட வேராலை பிளந்து கிடந்தது. உனக்குத் தெரியுமே, வீட்டுக்க மாமரமும் முளச்சுக் கிடந்தது. அதினாலை சாந்தன் போனவருசம் வெளிநாட்டாலை வரேக்க எல்லாத்தையும் தறிச்சுப் போட்டு வீட்டையும் வடிவா திருத்தினவன். உள் முத்தத்தையும் அடச்சுப் போட்டான்.
o ஓ அப்பிடியே! முந்தி நானும் சாந்தனும் உள் முத்தத்தில தானே விளையாடிறனாங்கள். அப்ப உள்ளுக்க கொஞ்சம் காத்தோட்டம்தான் என்ன?
o சரியாச்சொன்னா தம்பி, இப்ப எல்லாத்தையும் அடச்சமாதிரிக் கிடக்கு. இப்பபார் இந்த நடு ஹோலுக்க காத்து வர இடமில்லை. பான் இல்லாமல் இருக்கேலாமைக் கிடக்கு. மேல வேற சீற்று... இந்தக் கறண்டும் இல்லையெண்டா ஆள் முடிஞ்சுது.
o சீற்றே... நான் அமைக் கவனிக்கேல்ல. அப்ப முழுக்க ஓடென்ன. தேனி ஓடு நல்லதெண்டு நீங்கள் ஓடி திரிஞ்சு வாங்கின்னீங்கள் என்ன? ஓட்டு வீடும் ஒரு சுகந்தான் அண்ண.
o இப்ப யாரப்பு அதப்பாக்கிறது? சீற் வேலை சிம்பிளப் போச்சு. இப்ப எங்கட சனம் எதச் சிம்பிளாச் செய்யலாமமெண்டும், எப்பிடிப் பஷனாச் செய்யலாம் எண்டெல்லே அலையுது.
o மேல்மாடி வீடுகளும் கூடிப்போச்சு. அப்ப மேல்மாடிக்காரரெண்டா சுகுமாரண்ண மட்டுந்தானே?
o தம்பி சில சனம் மேல்மாடி கட்டிறது வாற ஆக்களுக்கு நல்ல ரென்ருக்கு குடுத்து உழைக்கலாம் எண்டு. மாடிக்காருக்கு பக்கத்திலை ஒரு மாடி வீடு இப்ப கட்டிக்கிடக்கு கண்டனீரே? அதிலை இப்ப ஆக்கள் நிறைப் பேர் வந்து தங்கினம். ஒரு நாளைக்கு 3000 ஆம்.
o ஓமண்ண நானும் பாத்தனான். இரவிரவா பாட்டு வேறையாம். பாவம் சுகுமாரன்ரி.
o தம்பி இதைக்குடியுமன். எலுமிச்சந் தண்ணி. இஞ்சேருங்கோ, உங்களுக்குப் பிறகு தாறன். இப்பதானே வெய்யிலால வந்தனியள். பித்தம்...
o அண்ணை நீங்கள் என்ன நினைக்கிறியள், சனம் உப்பிடிக் கட்டிடங்கள் கட்டிறது சரியோ?
o யாரோடை தம்பி கதைக்கிறது. யாழ்ப்பாணத்தில ஒருத்தன் சீற்றுப் போட்டா எல்லாருமெல்லே சீற்றெண்டு அலையுதுகள். எங்கட வீட்டுக்கையே முன்னுக்க நிண்ட வேம்பு தறிக்கத்தான் வேணும். ஆனா பின்னிக்கு நிண்ட வேம்ப தறிக்க வேண்டாம், அதர் ஒண்ட எடுத்துவிடுவம் எண்டு கேட்டுப்பாத்தனான். சாந்தன் கேக்கேல்லை. தறிச்சுப் போட்டான். உனக்கு தெரிஞ்சிருக்கும். வீட்டு உந்த வாசல்ல ஒடு போட்ட பத்தி ஒண்டு கிடந்ததெல்லே. அதையும் உடைச்சாச்சு.
o ஹ! ஓம் ஓம் அதுதான் முன் முத்தத்தில எதோகுறைஞ்ச மாதிரிக்கிடந்தது. முந்தி அதுக்க தானே சைக்கிள் விடிறநாங்கள். அதுல ஒரு திண்ணையும் இருந்ததெல்லே. சோக்கான இடம். நீங்களும் சரசண்ணையும் அதில ஆடு-புலி ஆடிறனீங்களெல்லே... ஆனா அண்ண, எங்கட வீட்டிலையும் உப்பிடித்தான். உங்களுக்கு ஞாகமிருக்க அண்ண, இந்தியன் ஆமிப் பிரச்சினக்கு எங்கட வீட்டில இருக்கேக்க எங்கட மா மரத்துக்குக் கீழையெல்லே சமைக்கிறனியள்.
o ஓந் தம்பி. அத மறக்கேலுமே. அப்ப நாங்கள் மூண்டு குடும்பம் இருந்தனாங்களெல்லே. அதுவும் காலந்தம்பி.
o அந்த மரமுமெல்லே இப்ப தறிபட்டுப் போச்சு. அதைத் தறிச்சுப் போட்டு அதில ஒரு கறாச் கட்டியிருக்கிறார் அப்பா. நான் சொல்லிப் பாத்தனான். அவர் மரங்குருவிச்ச பத்திப் போச்சு... மரம் செத்துப்போச்சு எண்டு ஆயிரத்தெட்டு கதை சொல்லிறார்.
o என்ன செய்யிறது தம்பி. மரங்கள் இருக்கேக்க அருமை தெரியாது. உங்கட மாமரத்துக்குக் கீழ எத்தின நாள் இருந்து சாப்பிட்டனாங்கள். நாங்கள் இருக்கேக்க பெருவாரி காயெல்லே? பக்கத்துப் பிள்ளையார் கோயில் பூசைக்கு ஐயர் உங்களிட்டையெல்லே மாவில வாங்க வாறவர். ச் சே... என்ன செய்யிறது.
o நீ இருக்கிற நாட்டில எப்பிடித்தம்பி, மரந்தடியள் நிறைய இருக்கே?
o அதையேன் கேக்கிறியள் அண்ண. மருந்துக்கும் காணேலாது. எல்லாம் கட்டிடந் தான். பிளாஸ்திக் பூச்சாடிகள் நிறைய எங்கட ஒபீஸில கிடக்கு. அவ்வளவுதான். அங்க இருக்கேக்க தான் இங்கத்தே அருமை தெரியுதண்ணை.
o போனமாசம் ஒருக்கா கண்காண்டியெண்டு போன்னான். அங்க பாத்தா எங்கட ஊர் நாயுருவி மரத்தை பெரிசா பக்குவப்படுத்தி வைச்சிருந்தாங்கள். சிரிப்புத்தான் வந்தது.
o சரியண்ண, பகல் சாப்பாட்டுக்கு வீட்ட வாறனெண்டனான். வரப்போறன். ஒருக்கா உங்கள் எல்லாரையும் பாத்திட்டுப் போகலாம் எண்டுதான் வந்தனான். அக்காட்ட உங்களுக்கு ஒரு சுவற்றர் குடுத்தனான், பாருங்கோ.
o இஞ்சாருங்கோ உங்களுக்கு சுவட்டர். எனக்கு ஒரு சீலையும் தம்பி கொண்டு வந்திருக்கிறது.
o வெய்யிலுக்க போடேலாதுதான் அண்ண. வாற மாசிக் குளிருக்குப் போடுங்கோ. அங்க இருந்து வேற என்னத்த்தான் கொண்டுவாறது..
o இதில என்ன தம்பி...
o சரியண்ண வாறன். வெளிக்கிடமுதல் ஒருக்கா வரப்பாக்கிறன்.
o ஓந்தம்பி. அப்பாவையும் கேட்டதாச் சொல்லு.
o கட்டாயம். வாறன்

Comments