Skip to main content

அலட்டல் 1 - ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும்

ஸ்ராட்டப்பும் சரஸ்வதி பூசையும் 

இவற்றுக்கென்ன சம்பந்தம்?

சரஸ்வதி பூசை என்று சொன்னாலும் அது மூன்று தேவியருக்கு உரியது தானே. முதல் மூன்று நாட்கள் துர்க்காவிற்கும்
அடுத்த மூன்று லச்சுமிக்கும் இறுதியாக மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் நிகழ்ந்து 10ம் நாள் விஜயதசமி கொண்டாடப்படும்.

சரி அதுக்கென்ன, சிறுபிள்ளைப் பராயத்திலிருந்து நாங்கள் கேட்ட விடயந்தானே?

துர்க்கா எமக்கு வீரத்தினைத் தருவார், வலிமையும் தருவார். வலிமை புய வலிமை உடல்வலிமைகளுக்கு அப்பால் மனவலிமையையுந் தருவார். அது விடாமுயற்சிக்கும் தீவிர ஈடுபாட்டுக்கும் வழிவகுக்கும். ஸ்ராட்டப்புக்கு மிக அடிப்படையான விடயமாக அதில் வெற்றிகண்டோரும் தோல்விகண்டோரும் ஏற்றுக்கொள்கின்றனர். ஸ்ராட்டப்பில் பணத்தினை வளத்தினை முதலீடுசெய்யும் முதலீட்டாளர்கள் ஸ்ராட்டப்பில் வளங்களை முதலீடுசெய்யும்போது முதலாவதாகப் பார்க்கும் விடயம் அணியில் உள்ள உறுப்பினர்களின் முயற்சி, அவர்கனின் விடாமுயற்சி, பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வலிமை என்று வலிமையைப் பெரிதும் பரிசோதிப்பர்.  பெரும்பாலும் அவர்கள் முதலீடு செய்வது அணியிலேயே! அவர்களின் எண்ணக்கரு இரண்டாம்பட்சம்.

எமக்கு வலிமை மட்டும் இருந்தால் போததாது, வளங்களை அள்ளித் தருவது இரண்டாதாக நாம் வழிபடும் லச்சுமி. முக்கியமாக ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யா லட்சுமி, தன லட்சுமி என்ற அஷ்ட லச்சுமிகளும் பணம் மேலும் தைரியம் வெற்றிச் செல்வம் அறிவுச் செல்வம் என்று நமக்கு மிக முக்கியமாக ஸ்ராட்டப் செய்யத் தேவைப்படும் அனைந்து வளங்களையும் வழங்குகிறாள் லச்சுமி.

நிறைவாக சரஸ்வதி தேவி. எமக்கு வலிமை, வளம் இருந்தாலும் புத்தம் புதிய யோசனைகள் எண்ணங்கள் எண்ணங்களைச் செயற்படுத்துவதற்கான அறிவு என்று ஸ்ராட்டப்புக்குத் தேவையான மூன்றாவது முக்கியமான தேவைகளை நிறைவு செய்வாள் சரஸ்வதி. மிக்கியமாக இன்று பேசப்படும் Distruption / Innovation என்று அனைத்துக்கும் ஆதாரமான அறிவையும் கலைத்துவத்தையும் கலைநயத்தையும் சேர்த்து வழங்குவாள் சரஸ்வதி. ஆனால் எமக்கு நல்ல Project Idea மட்டும் இருந்தால் போதாது. இன்றைய உலகில் இவ்வெண்ணங்களுக்கு அவ்வளவாக மதிப்பில்லை. ஆனால் வலிமையும் வளமும் இருக்குமானால் இந்த எண்ணங்களுக்கு வலுச்சேர்த்து சிறந்த வியாபாரத்தினை உருவாக்க வழிவகுக்கும்.

இறுதியாக அது என்ன விஜயதசமி?

அன்றுதான் வலிமைபொருந்திய வளமுள்ள அணி ஒரு சிறந்த எண்ணக்கருவை Product ஆக மாற்ற ஆரம்பிக்கும் நாள். அன்று புதியவற்றைத் தொடங்கும் நாள், அவற்றுக்குத் தேவையான சக்திகளை வேண்டி வழிபட்டு புதியவற்றைத் தொடங்குவர்.

இதுதான் ஸ்ராட்டப்புக்கும் சரஸ்வதி பூசைக்குமான தொடர்பு! :)

அனைவருக்கும் ஆரம்பிக்கும் அனைத்தும் கைகூடட்டும்!!!

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...