நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.
2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன்
PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர்.
நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம்.
இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம்.
அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும்.
சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் தட்டச்சுச் செய்யலாம். அத்தோடு பெரும்பாலான இந்த கையடக்க்க் கணினிகளில் தொலைபேசி வசதியும் உண்டு.
ஏனைய கணினிகளைப் போன்று இவற்றிலும் இயங்குதளங்கள் அதாவது ஒப்பரேற்றிங் சிஸ்டம் இருக்கும், உதாரணமாக வின்டோஸ் சீஇ. அத்தோடு இன்று லினக்ஸ் பதிப்பை உடைய உள்ளங்கைக் கணினிகளும் வெளிவரத் தொடங்கிவிட்டன.
இவ்வகையான கணினிகளுக்கு எச் பி, மைக்கிரோசொப்ட்.. போன்ற நிறுவனங்கள் பிரபல்யமானவை.

Comments