நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.
கணினி மொழிகள்
நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள்.
இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு.
சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max prograph இவ்வாறு அவற்றின் பயன்பாடு குறித்தும் கணினிமொழிகளைப் பாகுபடுத்தலாம்.
இன்று பொதுவாக, Java, Microsoft நிறுவனத்தின் டாட் நெற் சார் மொழிகள் – இவற்றில் c#, vb, asp , இணைய மொழிகள் – java, asp, php இவ்வாறான மொழிகள் இலங்கையில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இன்று பிரபல்யமாகிவரும் இலவச திறந்த மூல மென்பொருள்களை எடுத்துக்கொள்வோமாயின், அவற்றில் standalone ஐப் பொறுத்தவரையில் ஜாவாவும் இணையத்தைப் பொறுத்தவரையில் ஜாவா, php அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

Comments