நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.
2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன்
எமது நாட்டில் மிக அண்மைக்காலம் வரை நாம பயன்படுத்தி வந்த கைத்தொலைபேசி தொழில்நுட்பமானது யி.எஸ்.எம். என அழைக்கப்படுகிறது. அதாவது குளோபல் சிஸ்டம் 4 மொபைல் கொம்மினிகேசன். இவை கம்பியில்லாதொடர்புத் தொழில்நுட்பத்தின் அதாவது வயர்லெஸ் தொழில்நும்பத்தின் 2வது பரப்பரையைச் சேர்ந்தவை. நாம் இதை 2யி தொழில்நுட்பம் என்போம்.
அத்தோடு எம்மில் பலர் இன்றும் பயன்படுத்திவருகின்ற, யி.பி.ஆர்எஸ் (General Packet Radio Service) ஆனது 2.5ம் பரம்பரை கம்பியில்லாத் தொழில்நுட்பமகும். அதன் உதவியுடன் நாம் கைத்தொலைபேசிகளூடு இணையத்தில் உலா வரக்கூடியதாக இருந்தது. இவை 56 முதல் 114 கிலோ பிட்ஸ் வேகத்தினைக் கொண்டிக்கின்றன.
ஆரம்பத்தில் ஒலியை மட்டுமே பரிமாற்ற உதவிய தொழில்நுட்டபம் 2ம் பரம்பரை அல்லது 2யி உடன் சுருக்க தகவல் சேவையையும் வழங்கியது. பின் வந்த 2.5 யி ல் இணைய அணுகல் சேர்க்கப்பட்டது.
பின்னர் அறிமுகமாகி மிக அண்மைக்காலங்களில் எமது நாட்டில் பிரபல்யமடைந்துவரும் 3யி மற்றும் 3.5 யிதொழில்நுட்பங்களில் ஒலி-ஒளி அல்லது சலனப்படங்களையும் பரிமாறப்படக்கூடியதாக இருக்கின்றது.
2006 ம் ஆண்டுஅறிமுகப்படுத்தப்பட்டு மிகவும் வேகமாகப் பரவிவரும் 3.5 யி தொழில்நுட்பத்தின் மூலம் நாம் மிக விரைவான இணைய அணுகல்களையும், ஒலி, ஒலி-ஒளி மற்றும் தொலைக்காட்சி streaming ஐயும் பெற்றுக்கொள்ளலாம்.
3.5 or HSDPA - High-Speed Downlink Packet Access - இன் உணமயையான பதிவிறக்கவேகம் 14.4 Mbit/s. ஆக இருப்பினும் எமக்கு 3.6 மெகா பிட்ஸ் முதல் 7.2 வரையான வேகத்திலேயே தரவுளைப் பதிவிறக்கிக்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
ஆனால் எல்லாவிதமான கைத்தொலைபேசிகளும் இவ்வகை வசதியைத் தரமாட்டாது. இவற்றுக்காக இயலுமைப்படுத்தப்பட்ட கைத்தொலைபேசிகளே பயன்படும்.
இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என்வெனில், 3யி இற்கும் 3.5யி இற்குமுள்ள பிரதானவேறுபாடு அவற்றின் பதிவிறக்கவேமேயாகும்.
நாம் ஏற்கனவே இந்த 3.5 யிதொழில்நுட்பம் மூலம் சிறப்பாக சலனங்களை streamingசெய்ய முடியும் என்று பார்த்தோம். இங்கு streaming எனும்போது பயனாளருக்குக் கிடைக்கும் சலனப்படத்தை அல்லது ஒலி-ஒளி வடிவத்தை அவரால் கட்டுப்படுத்த முடியாது என்பதே பொருளாகும். அதாவது ஏறக்குறை ஒருதொலைக்காட்சி ஒளிபரப்புக்கு அதனை ஒப்பிடலாம்.
இதுவே 2யி, 2.5யி, 3யி மற்றும் 3.5யி சம்பந்தமானதொரு மேலோட்டமாகும்.

Comments