Skip to main content

விவாகரத்துக் கலாசாரம்

சென்ற வெள்ளிக்கிழமை ஒரு கருத்தரங்கொன்றில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கிடைத்து. அதில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தவலும் கிடைத்து. அதுதான், இலங்கையில் நகர்சார் பகுதிகளில் 36 சதவீத திருமணமானவர்கள் முதல் 5 வருடங்களுக்குள் விவாகரத்து பெற்றிக்கொள்கிறார்கள் என்பதாகும். அதைவிட அதிர்ச்சி தரக்கூடிய விடயமென்னவெனில், இது உலகளாவில் இரண்டாவது பெரிய சதவீதம். அதாவது, அமெரிக்காவில் ஏதோவொரு இடத்தில் இது 43 சதவீதமாகக் காணப்படுகிறது. அடுத்த இடத்தை இலங்கை நகர்சார் பகுதிகள் பிடித்துள்ளன.

நாம் பார்த்தோமானால், எப்போதும் நாம் மேற்கத்தையவர்களின் பழக்கவழங்ககங்களைப் பழகுபவர்களாக இருக்கிறோம். அவர்களது நடை, உடை, பாவனை.... இப்படி எல்லாவிதத்திலும் நாங்கள் அவர்களைப் பின்பற்றுபவர்களாக இருக்கிறோம். இதில் கவலைக்கிடமான விடயமென்னவெனில், பெரும்பாலும் வெளிநாட்டவர்கள் குறித்த ஒரு பழக்கத்தை விடும் வேளையில் நாம் அதனைப் பற்றிக்கொள்கிறோம். ஏன் அவர்கள் அதனை விட்டுவிலகுகிறார்கள் என்று யோசிப்பதில்லை.

நாம் சொல்லிக்கொண்டிருந்தோம், இது என்ன வெளிநாட்டுக்கலாசாரம்... கணவன் மனைவிக்குகிடையில் கூட செறிந்த உறவில்லை... ஆனால் நாம் இன்று எம்மை அந்த இடத்தில் நிறுத்தியிருக்கிறோம். இலங்கையில் இன்று கிராமத்தைத் தேடவேண்டிய நிலைமையில், இந்த விவாகரத்துக் கலாசாரமும் அவர்களை அடைந்துவிடுமா என்பது சற்றி யோசிக்கவைக்கிறது.

நாம் இதற்கான காரணத்தை உலகமயமாக்கல் மீதும் ஊடகங்கள் மீதும் தூக்கிப்போட்டுவிட்டு இருந்துவிடமுடியாது. நான் சொல்வேன், இன்று நாம் நடந்துவந்த பாதைகளைத் திரும்பிப்பார்க்கதே முதற்காரணம். அவ்வாறு நாம் செய்வோமாயின், நாம் வந்த பாதை, கடந்து வந்தவை, அதன் பெறுமதி.... இப்படியாக எல்லாம் எமக்குள் இருக்கும்...

இனி என்ன செய்ய... பார்ப்போம்..,. அடுத்து நாங்கள் எந்த பக்கத்தை நோக்கிப்போகப்போகிறோம் என்று :-(


Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...