Skip to main content

வானொலித் தகவல் - 2008.07.04

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.

Firefox 3.0

இன்று பார்த்தோமானால் பயர்பொக்ஸ் 3 சம்பந்தமாக பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கலாம், பயர்பொக்ஸ் 3 என்பது Mozilla அறக்கட்டளையால் வெளியிடப்படும் ஒரு இலவச திறந்த மூல இணைய உலாவியாகும். இந்த பயர்பொக்ஸ் 3.0 இன் இறுதிப் பதிப்பு கடந்த 17ம் திகதி 46 மொழிகளில் வெளியிடப்பட்டது. அது வெளியிடப்பட்டு 24ம் மணித்தியாலங்களுக்குள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனாளர்கள் அதனைப் பதிவிறக்கியுள்ளார்கள். இந்த எண்ணிக்கையே இதுவரை வெளிவந்த மென்பொருள்களில் ஒருநாளில் அதிக எண்ணிக்கையில் பதிவிறக்கப்பட்ட மென்பொருளாகும். இது திறந்த மூல மென்பொருள் தயாரிப்பாளர்களுக்குப் பெரும் ஊக்கத்தைக் கொடுத்துள்ளதுடன், பெரும் வெற்றியாகவும் கருதப்படுகிறது.
இனி பயர்பொக்ஸ் 3 இல் உள்ள சிறப்பம்சங்கள் எவையெனப் பார்ப்போம். உங்களில் பலர் பயர்பொக்ஸ் 2ம் பதிப்பைப் பயன்படுத்திவரலாம், அதன் மூலம் சிலவேளை விரக்தியடைந்தும் இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் மோதிய பிரச்சினைகள் எல்லாம் பயர்பொக்ஸ் 3 பதிப்பில் திருத்தப்பட்டுள்ளது.
முக்கியமாக, பயர்பொக்ஸ் 3 செயல்படுவதற்கு மிகவும் சிறிய நினைவிடம்போதுமானது. அத்தோடு அதனுடைய rendering திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்பதிப்பில் எழுத்துக்கள் மிகவும் தெளிவாக, உறுப்பாகத் தெரியும். அத்தோடு தமிழ் வெளிப்பாட்டில் இருந்துவந்த பிரச்சினையும் இதில் தீர்க்கப்பட்டுள்ளது.
இதுதவிர, நிறையப் புதிய அம்சங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, மிகவும் வசதியான address bar, back / forward buttons / password manager இவ்வாறாக பல்வேறு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
எல்லாவற்றுக்கும் மேலாக, Firefox மென்பொருளின் மேல் நாம் விரும்பியபடி பல ஆயிரக்கணக்கான மேலதிக அம்சங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். அதாவது நாம் பயர்பொக்ஸ் இல் ஆஹா, இப்படியொரு வசதி இருந்தால் நன்றாக இருக்கும் அப்படி ஒரு வசதி இருந்தால் நன்றாக இருக்கும் என்று சிந்தித்து தேடினோமானால், பெரும்பாலும் அவ்வான வசதிகளை நீங்கள் காணலாம்... ஏனென்றால் உலகம் முழுவதிலிருந்தும் அத்தனை பேர் இதற்காக தமது நேரங்களை செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
அத்தோடு, மேலதிகமாக நீங்கள் இந்தப் பயர்பொக்ஸ் 3 ஐ தமிழில் கூடப் பயன்படுத்தலாம். அதற்கான மொழிக்கட்டு அல்லது Language pack ஐ நீங்கள் நிறுவி பயர்பொக்ஸ் 3 உலாவியை தமிழில் பார்க்கலாம், பயன்படுத்தலாம். இதனைப் பெறுவதற்கு, நீங்கள் Google இல் Firefox 3 Tamil Sri Lanka pack என்று தேடின் அது கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...