Skip to main content

வானொலித் தகவல் - 2008.03.25

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.

2008.03.22 ம் திகதி : கணினி விளையாட்டுக்கள்

கணினி விளையாட்டுகள் பெரும்பாலும் ஒரு தீங்கான விடயமாகவே கருதப்பட்டுவருகிறது. பொதுவாகப் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் கணினி விளையாட்டுக்களுக்கு அடிமையாவதைப் பற்றிக் கவலைப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
ஆனால் கணினி விளையாட்டுகள் முற்றுமுழுதாகத் தீங்கானவை அல்ல! இப்பொழுதுபோக்கம்சத்தின் மூலம் நாம் நிறையக் கற்றுக்கொள்ளமுடியும். நிறைய வகையான விளையாட்டுகள் இருக்கின்றன. உதாரணமாக strategic Games நாம் எப்படி ஒரு விடயத்தை யோசிக்கவேண்டும், இப்படி அதற்காக ஆயத்தம்செய்யவேண்டும் போன்றவற்றை எல்லாம் பழகிக்கொள்ளமுடியும். உதாரணமாக ஒரு விளையாட்டிருக்கிறது அதில் நாம் வேலைசெய்யவேண்டும், அதன் மூலம் பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு வீடுவாங்கலாம், சேமிக்கலாம், வியாபாரம் செய்யலாம்... எனவே இவை சம்பந்தமான எமது அறிவை தீட்டிக்கொள்ளலாம் அதாவது எவ்வாறு வளத்தை சேர்ப்பது, பயன்படுத்துவது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அதற்காக நம்மைத் எப்படி தயார் படுத்துவது....இவற்றையெல்லாம் கற்றுக்கொள்ள உதவுகின்றன.
சில நாடுகளின் வளர்ச்சிக்கே இந்த கணினி விளையாட்டுகளும் ஒரு காரணமாக இருந்திருக்கிறது என்றே சொல்வேன். உதாரணமாக நாம் கொரிய நாட்டை எடுத்துக்கொண்டால், அந்த அரசாங்கம் மக்களிடையே கணினியறிவைப் பரப்புவதற்காக இவ்விளையாட்டுகளைப் பயன்படுத்தியது. பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்தில் பெரும்பாலும் இளையவர்கள் அவற்றுக்கு அடிமையாகிவிட்டனர். பின்னர் அரசாங்கள் அவர்களின் அந்த கணினியை விளையாட்டறிவை கணினி விளையாட்டுகளைத் தயாரிக்கப்பயன்படுத்தியது. இன்று உலகத்தில் கணினி விளையாட்டுகளின் விற்பனையில் ஒரு முன்னணி நாடாக அது திகழ்கிறது.
எனவே கணினி விளையாட்டுகளினால் பற்பல நன்மைகள் உண்டு. அவற்றை முற்று முழுதாக ஒதுக்கமுடியாது. ஏன் கணினித் துறையில் மிக முக்கியதொன்றாக்கக் கருதப்படும் Turing Test என்பதே ஒரு கணினி விளையாட்டாகும். கணினியின் Intelligence பற்றியதான ஒரு பரிசோதனை!
இக்கணினி விளையாட்டுகள் அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிட்டதென்றே கூறுவேன். அதாவது Virtual Worlds. இதுபற்றி இன்னொரு முறை பார்ப்போம்.


இந்த கணினி விளையாட்டுகள் இன்று அடுத்த கட்டத்துக்குச் சென்றுவிட்டதெனலாம். Virtual Worlds இன்று உருவாகத் தொடங்கியிருக்கின்றன. பல நிறுவனங்கள் இந்த மென்பொருளைத் தருகின்றன. எமக்குத் இணையத்தொடர்பு இருப்பின் அம்மென்பொருளினூடாக Virtual Worlds க்குள் நுழையலாம். அங்கு நாம் காணும் ஒவ்வொருவரும் இந்த உலகத்தின் ஏதோவொரு மூலையிலுள்ள ஒரு நபர்தான்..... தொடரும்...

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...