Skip to main content

வானொலித் தகவல் - 2008.06.27

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.

கணினியின் திறனை அதிகரித்தல்.

நிச்சயமாக உங்களுக்குத்தெரியும், வன்பொருள்களின் அளவை அவற்றின் கொள்ளவுகளை அதிகரிப்பதன் மூலம் கணினியின் திறனை அதிகரிக்கலாம் என்பது. ஆனால் நாம் இன்று பார்க்கப்போன்ற விடயம் என்னவெனில், எப்படி அவ்வாறு புதிய வன்பொருள்ளோ அல்லது பணச்செலவோ இல்லாது, ஒரு கணினியின் திறனை குறிப்பிட்ட அளவுக்கு அதிகரிக்கலாம் என்று.
கணினியின் திறனை எடுத்துக்கொண்டால், அது கணினியின்
1. தற்காலிக நினைவகமான RAM
2. CPU
3. Harddisk இல் உள்ள வெற்றிடம் மற்றும் அதில் உள்ள கோப்புகளின் ஒழுங்கமைப்பு.
1. முதலாவதாக வன்தட்டின் திறனை எவ்வாறு அதிகரிக்கலாம் என்று பார்ப்போம். சிறிதுகாலம் செல்ல வன்தட்டிலுள்ள கோப்புகள் / தரவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சிதறிக்காணப்படலாம். எனவே அவை அவசியப்படும் நேரத்தில் அவை சிதறிக்கிடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று அவற்றை வாசிக்கவேண்டிய தேவை கணினிக்கு இருக்கிறது. இது குறித்த கணினியின் திறனை குறைக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்று. இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், குறித்த வன்தட்டை defragmentation செய்யவேண்டும். குறைந்த்து மாத்த்திற்கொருமுறை செய்வது நல்லது.
2. அடுத்தாக வன்தட்டில் போதிய வெற்றிடத்தைப் பேணுதல் : கணினி இயங்கும்போது அது தற்காலிகமாகப் பல கோப்புகளை உருவாக்கும். பின்னர் சிலவேளை அவற்றை நீக்காது. அத்தோடு நாம் இணையத்திற்கு செல்லும் ஒவ்வொரு தடவையும் நாம் செல்லும் இணையத்தளங்கள் மற்றும் அது சம்பந்தமான விடயங்களும் கணினியில் எம்மை அறியாமல் பதியப்படும். எனவே இவ்வாறான அனாவசியமான கோப்புகளை நீக்கி நீங்கள் உங்கள் வன்தட்டிலுள்ள இடத்தினை அதிகரித்துக்கொள்ளலாம்.

CPU மற்றும் RAM திறனை அதிகரிப்பதென்பது கொஞ்சம் சிக்கலான விடயம். அதாவது, கொஞ்சம் ஆழ்ந்த கணினி அறிவு அவசியம். இதற்கு நீங்கள் செய்யவேண்டியதென்னவெனில், உங்கள் கணினியில் உள்ள அனாவசியமாக செயற்படுத் சேவைகளை நிறுத்தவேண்டும். அனாவசியமான மென்பொருகள் கணினி ஆரம்பிக்கும்போது சேர்ந்து ஆரம்பிக்கின்றனவா என்று பார்க்கவேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் கணினியில் வைரஸ் இல்லாமல், அத்தொற்று வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...