Skip to main content

வானொலி - 2008.06.14

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன்.

உபுன்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் இயங்குதளம்

உபுன்டு இயங்குதளம் மற்றும் விண்டோஸ் இயங்குதளம் பற்றி நாம் ஏற்கனவே பலமுறை பார்த்திருக்கிறோம். சுருக்கமாக உபுண்டு ஒரு இலவச திறந்த முல மென்பொருள் அத்தோடு விண்டோஸ் ஆனது புரொப்பிறைறி மென்பொருளாகும். அதற்குப் பணங்கொடுத்துப் பெற்றுக்கொள்ளவேண்டும். அத்தோடு ஒருமுறை பணங்கொடுத்துப் பெற்றுக்கொண்டாலும் அதன் பின் வரும் எந்தவொரு புதிய பதிப்புகளும் இலவசமாக்க் கிடைக்காது. முன்னர் உபுண்டு போன்ற லினக்ஸ் குடும்பம் சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட பெரிய குற்றச்சாட்டு, அவை User friendliness குறைந்தவை, சாரதாரண கணினிப் பணியாளர்களால் பயன்படுத்த முடியாது என்பதே.
ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. நாம் விண்டோஸில் எப்படி இலகுவாக செயற்பாடுகளைச் செய்தோமோ, அதேபோன்று இன்று உபுண்டு உட்பட பல லினக்ஸ்சார் இயங்குதளங்களிலும் இலகுவாகப் பணியாற்றக்கூடியதாக இருக்கிறது.
மேலும் முன்னரைப்போலன்றி இன்று இந்த உபுண்டு பதிப்புகளை மிகவும் இலகுவாக நிறுவிக்கொள்ளலாம்.
முன்னர் முன்வைக்கப்பட்டு வந்த ஒரு குற்றச்சாட்டு என்னவெனில், லினக்ஸ் குடும்பத்தைப் பொறுத்தவரை சாதாரண பயனாளர்களுக்குரிய தேவையான மென்பொருள்கள் இல்லை என்பதே. ஆனால் இன்று எனக்கு ஏராளமான மென்பொருள்கள் கிடைக்கின்றன மற்றும் புதிய பல மென்பொருள்கள் வந்துகொண்டிருக்கின்றன. அவற்றின் நிறுவல் முறைகளும் இன்று இலகுவாக்கப்பட்டிருக்கிறது. ஏன், விண்டோஸ் ஒபீஸ் 2007 பதிப்புகளிற்காக உருவாக்கப்படும் ஆவணங்களைக் கூடத் திறந்து பார்க்க்க் கூடிய வகையில் இன்று ஒப்பின் ஒப்பீஸ் 3 திறனாக்கப்பட்டுள்ளது.
இன்று விண்டோஸ்சார் அனைத்துக்கோப்புகளையும் உபுண்டு இயங்குதளத்தில் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது. ஆனால் லினக்ஸ் இயங்குதளப்பகுதியை விண்டோஸ் பதிப்புகளில் இன்னமும் பயன்படுத்த முடியாத ஒருநிலை இருக்கிறது.

Comments

Popular posts from this blog

வானொலித் தகவல் - 2008.05.24

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். Wimax தந்தியில்லாது நீண்ட தூரங்களுக்கு தரவுகளை அனுப்புவதற்கான தொழில்நுட்பமே இந்த வைமக்ஸ் என்பதாகும். இதன் விரிவு : Worldwide Interoperability for Microwave Access பொதுவாகச் சொல்வதெனின், இத்தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி தொடர்பாடல் நிறுவனங்கள் தமது புரோட்பான்ட் இணைப்புகளை தந்தியில்லா சேவையூடு மக்களிற்கிடையே பகிர்கின்றன. இந்நாட்களில் தந்தியூடான புரோட்பான்ட் இணைப்புகள் பிரபல்யமாகி இருக்கின்றன. வைமக்ஸ் என்பது தந்தியில்லா புரோட்பான்ட் அணுகலுக்கு வழிவகுக்கிறது. சரி இதனைப் பெறுவதற்கு முதலில் நீங்கள் முகவர்களிடம் இருந்து குறித்த இணைப்பைப் பெற்றுக் கொள்ளவேண்டும். பின்னர் உங்களுடைய கணினியில் குறித்த இணைப்பைப் பயன்படுத்துவதற்கு நீங்கள் PC Cards / USB dongles ஐயோ பயன்படுத்தலாம். PC Cards எனப்படுபவை ஒரு சிறிய அட்டை, அதனை நீங்கள் உங்களுடைய கணினியில் சொருகவேண்டியருக்கும், பொதுவாக இன்றைய மடிக் கணினிகள் இந்த அட்டையை சொருகும்...

வானொலித் தகவல் - 2008.06.20

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். கணினி மொழிகள் நாம் பேசும் தமிழை கணினியாலோ அல்லது கணினி பேசும் துவித இலக்க மொழியை எம்மாலோ அறிந்துகொள்ள முடியாது. எனவே கணினிகளும் மனிதர்களும் – குறிப்பாக கொப்பியுட்டர் புரோகிராமர்களுக்கும் அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மொழிகளே கணினிமொழிகள். இன்று ஆயிரக்கணக்கான கணினிமொழிகள் வந்துவிட்டன. இம்மொழிகளை பல்வேறு வகையாகப் பாகுபடுத்தியுள்ளனர். அதாவது 1வது பரம்பரை மொழிகள் 2வது... இவ்வாறு இன்று 5வது பரம்பரை மொழிகள் வரை உள்ளன. இன்று பிரபல்யமாக உள்ள ஜாவா போன்ற மொழிகள் 3வது அல்லது 4வது பரம்பரையைச் சார்ந்தவை. 5வது பரம்பரைமொழிகள் பெரும்பாலும் AI இல் பயன்படுத்தப்படும் மொழிகளாகவே இருக்கின்றன. இது ஒரு வகைப் பாகுபாடு. சிலவேளைகளில் அவற்றின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டும் நாம் மொழிகளைப் பாகுபடுத்தலாம். உதாரணமாக, chip programming - vdhl , web programming – php, asp , database programming – sql , modelling programming – max...

வானொலித் தகவல் - 2008.04.18

நான் இலங்கை வானொலியின் தென்றல் சேவையில் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் கணினி சம்பந்தமான தகவல்களை வழங்கிவருகிறேன். அவ்வாறு நாம் வழங்கும் சில தகவல்களை இங்கே பதியலாம் என்றிருக்கிறேன். 2008.03.22 ம் திகதி : 2G, 2.5G, 3G, 3.5G பற்றியதொரு தகவலை வழங்கியிருந்தேன் PDA - Personal Digital Assistant எனப்படுபவை கையடக்க்க் கணினிகளாகும். அதாவது உள்ளங்கைக் கணினிகளாகும். பாம் ரொப் கொம்பியூட்டர். நாம் பார்த்தோமானால் மிகப் பழைய காலத்தில் நாம் கணினிகள் ஒரு கட்டிடமளவிற்கு இருந்தன. பின்னர் அவற்றின் பருமன் படிப்படியாக்க் குறைந்து மேசைக்கணினியாகி (டெஸ்க் ரொப் கொம்பியூட்டர்) மடிக் கணினியாகி (லப்ரொப் கணினியாகி) இன்று நாம் கையடக்க்க் கணினியையும் அடைந்துவிட்டோம். இந்த அடிப்படையில் நீங்கள் எதிர்பார்ப்பதுபோல் மேசைக்கணினிகளில் செய்யக்கூடிய பெரும்பாலான வேலைகளை இந்தக் கணிகளிலும் செய்யலாம். அதாவது இதனூடு நாம் வை பை தொழில்நுட்பம் மூலம் இணையத்தில் உலாவரலாம் மின்னஞ்சல்கள் அனுப்பலாம் அத்தோடு அவற்றில் கணினிகளில் பயன்படுத்தும் பெரும்பாலான ஆவணங்களையும் கையாளமுடியும். சில உள்ளங்கைக் கணினிகளில் நாம் விசைப்பலகைகளைப் பொருத்தித் ...